மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன.
இதில் காமராஜ் காமராஜ் பல்கலையில் அருகே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். அதில் ஈ பாக்கெட் உள்ளே இருந்தததை கண்டு அதிர்ந்த அந்த பெண், விற்பனையாளரிடம் பால்பாக்கெட்டை திருப்பி கொடுத்துள்ளார்.
பின்னர், ஆவின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், பேக்கிங் செய்யும் போது தவறுதலாக ஏதேனும் நடந்திருக்கும். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…