ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .
பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .
இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் .5 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த விலையேற்றத்தின்படி, பசும்பாலில் கொள்முதல் விலை 28 ரூபாயில் இருந்து, 32 ரூபாயாகவும், எருமை பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து, 41 ரூபாயாகவும் உயர்த்தபட்டுள்ளது.
இதனால் பயனர்களுக்கு ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும், அரை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகை பால் எவ்வளவு விலை கீழே பாப்போம்.
நீலம் : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 17 ரூபாயில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 20 ருபாயாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 18 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 21 ரூபாய் 50 காசாக உள்ளது.
பச்சை : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 19 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 22 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 20 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 23 ரூபாய் 50 காசாக உள்ளது.
ஆரஞ்சு : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 21 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 24 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 25 ரூபாய் 50 காசாக உள்ளது.
மெஜந்தா : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 16 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 19 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 17 ரூபாயில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 20 ரூபாயாக உள்ளது.
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…