#ஆவினில் 5 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்.!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் புதிய 5 பொருள்களை அறிமுகம் செய்துள்ளது. ஆவின் நிறுவனம் தயாரித்த ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி போன்ற 5 புதிய பால் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த 5 பொருள்கள் 90 நாள்கள் வரை கெடாதவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய ஆவின் மோரில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கி உள்ளனர்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.