கனமழை எச்சரிக்கை எதிரொலி : ஆவின் பாலகம் 24 மணிநேரமும் செயல்படும்!
கனமழை எதிரொலி காரணமாக சென்னையில் ஆவின் பாலகம் 24 மணிநேரமும் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுளளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இன்று முதல் நவம்பர் 28 வரையில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது
அதில் ஒரு பகுதியாக சென்னையில் 8 இடங்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையில் ஆவின் பாலகம் 24 மணிநேரமும் திறந்து இருக்கும் என பால் உற்பத்தி கூட்டுறவு இணையம் தெரிவித்துள்ளது. அதன்படி,
- அம்பத்தூர் பால்பண்ணை,
- அண்ணாநகர் குட்நஸ் டவர் பூங்கா பாலகம்,
- மாதவரம் பால்பண்ணை,
- வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்,
- வசந்தம் காலனி பாலகம், அண்ணா நகர் கிழக்கு,
- சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்,
- விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
- சிபிராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்.
இனி வரும் காலங்களில் கனமழையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடை என்று பால் விநியோகம் செய்திட, ஆவின் பாலகம், மேற்கண்ட 8 இடங்களில் 24 மணி நேரமும் பாலகம் திறந்து இருக்கும் என்றும் , அதிகபட்சமாக ஒருவருக்கு 4 பால்பாக்கெட் வீதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் ஆகியவை ஆவின் பாலகங்களின் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பால் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தேவைப்படும் இடங்களில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் தெரிவித்துள்ளது.