சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது – அரவிந்த் கெஜ்ரிவால்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்துடன் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன், ஆம் ஆத்மீ கூட்டணி இல்லை எனவும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை என டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மீ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.