நீர் நிலைகளில் ஆகாயத்தாமரை – இதற்கு பின் அரசியல் குறியீடு உள்ளதா..? அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது என ஒ.எஸ். மணியன் கூறியதற்கு பின்னால் அரசியல் குறியீடு ஏதேனும் உள்ளதா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.
இந்த நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், நீர்நிலைகளில் எங்கும் நிறைந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.எஸ். மணியன் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், எங்கும் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது என ஒ.எஸ். மணியன் பேசியதன் பின்னால், ஏதேனும் அரசியல் குறியீடு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார். இதனால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.