மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்னும், சுமார் ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்6ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இம்மாதம் 31-ம் தேதி வரை (இன்று) மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையதளத்திலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org என்ற புதிய இணையதள முகவரி வெளியிடப்பட்டது. எனவே, சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 2.27 லட்சமும், ஆன்லைன் மூலம் 1.39 லட்சம் என நேற்று முன்தினம் வரை மொத்தம் 1.56 கோடி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின் இணைப்பு அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும், ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…