ஆதார் எண் இணைப்பு முகாம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
சென்னையில் ஆதார் இணைப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாமை பார்வையிட்டார்.