மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு – இன்றே கடைசி நாள்..!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இதற்கான கால அவகாசம் மூன்று முறை நீடிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் இன்றுடன் நிறைவு
அதன்படி, இதுவரை 99% மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள நிலையில், மின்வாரிய வாரியம் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் இதுவரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காதவர்கள் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் இனி இணையம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.