இவர்கள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயம் – திருவாரூர் ஆட்சியர்

Default Image

மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும். மேலும், ஆண்டிற்கு ஒரு முறை உதவித்தொகை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று அறை எண்.6, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவாரூர் என்ற முகவரிக்கு 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

trivarur

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்