மதுபானங்களை வாங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் – ஐகோர்ட்
மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதில், மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் அவசியம் என கூறியுள்ளது. அதாவது, மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் 3 நாளுக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு மதுபாட்டில் மட்டுமே மது விற்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. மது விற்பனையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் விதி மீறல் இருந்தால் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்படும் என எச்சரித்துள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தம் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் ஒருவர் 2 மதுபாட்டிலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணை மே 14க்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.