9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 5 மாதம் கற்பமாக்கிய இளைஞர்!

கரூர் மாவட்டத்தில் கீழத்தலையூரில் உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்துள்ளார்.
இவரது மனைவி விஜயா ஆவார்.இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.இவரது ஒரு மக்கள் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர்களது வீட்டிற்கு அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
பின்னர் விஜயா மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவியிடம் கேட்டுள்ளனர்.அப்போது மாணவியை ஆசை வார்த்தை கூறி இளைஞர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக விஜயா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லோகநாதனை போக்சோ சட்டத்தின் படி கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025