திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் ஆவார்.இவர் ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வசிக்கும் அதே பகுதியில் நான்கரை வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.சிறுமியின் வீட்டு வழியாக செல்லும் தினேஷ்குமார் அடிக்கடி சிறுமியுடன் விளையாடுவர் என தெரிகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் தினேஷ்குமார் சிறுமியிடம் பேச்சு கொடுத்தபடி தினேஷ்குமார் விளையாடி வந்துள்ளார்.அப்போது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்துள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற தினேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.அப்போது வெகு நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் அவரது தாய் தேடி வந்துள்ளார்.
அப்போது தினேஷ்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் அக்கம்பக்கத்தினரை அழைத்து தினேஷிடம் தகராறில் ஈடுபட்ட சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதில் தினேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் தினேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…