Chennai Pallikaranai Honor Killing [FIle Image]
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி, அதே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரவீன், தனது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற பிரவீனை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாங்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தாம்பரம் காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை செய்கையில், கொலை செய்தது ஷர்மிளாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் என்றும், மாற்று சமூகத்தை சேர்ந்த பிரவீன் தனது தங்கையை திருமணம் செய்த காரணத்தால் நடைபெற்ற கொலை என்பதால் ஆணவக்கொலையாக பிரவீன் மரணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சர்மிளாவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரவீன் இறந்த தூக்கம் தாளாமல் சர்மிளா வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதில் கழுத்து நரம்புகள் உடைந்த நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோமாவில் இருந்த ஷர்மிளா இன்று உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன் கணவர் இல்லாத உலகில் நானும் இருக்க மாட்டேன் என்றும், தன் சாவுக்கு தனது குடும்பத்தினர் தாய், தந்தை, சகோதரர்கள் தான் காரணம் என்றும் தந்தை துரை, தாயார் சரளா, அண்ணன்கள் நரேன், தினேஷ் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார் ஷர்மிளா. ஏற்கனவே ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெற்றோர்கள் மீதும் வழக்கு விசாரணை பாய்ந்துள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…