குமரியில் ஓகி புயலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி….!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஓகி புயல் வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் பல உயிர்களையும், உடைமைகளையும் காவு வாங்கியுள்ளது.
இந்நிலையில், புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டம் சின்னத்துறையில் மக்கள் பாதை அமைப்பு சார்பாக ஓகி புயலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர், ஓகி புயல் ஆவண பட இயக்குனர் திவ்ய பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.