கோவையை சேர்ந்த ரூ.1 இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் கிடைத்த அற்புதமான பரிசு…!
கோவையை சேர்ந்த ரூ.1 இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் கிடைத்த புதிய வீடு.
கோவை ஆலாந்துறை அருகே உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். முதலில் 25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய கமலாத்தாள், விலைவாசி உயர்வால் தற்போது ஒரு இட்லி ரூ.1-க்கு விற்பனை செய்து வருகிறார்.
இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், மஹிந்திரா குழுமம் கடந்த ஆண்டே ஆனந்த் மஹிந்திராவின் அறிவுறுத்தலின்படி, கமலாத்தாளுக்காக நிலம் வாங்கி பதிவு செய்தது. இந்த நிலையில் அந்த நிலத்தில் அவருக்காக ஒரு புதிய வீட்டை கட்டி அன்னையர் தினமான இன்று அவரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை என பதிவிட்டுள்ளார்.
எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை. pic.twitter.com/KCN7urkSTG
— anand mahindra (@anandmahindra) May 8, 2022