கோலாகலமான தீபாவளி : அசத்தலாக கல்லா கட்டிய ஆவின்!

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

diwali celebration AVIN

சென்னை : நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்களுக்கு மத்தியில், ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் ” ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள். சுமார் 4.5 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களைத் தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனம் கிராம அளவில் உள்ள இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது.

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது.

தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என ஆவின் தரைபோல் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்