திண்டுக்கல் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தாடிக்கொம்பை அடுத்த சுக்காம்பட்டியில் அர்ஜுன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஆலையில் பணிபுரியும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பொன்னுதாய் நேற்று வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது தனது செல்போனை ஆலையில் மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று பொன்னுதாய் செல்போனை எடுக்க பட்டாசு தயாரிக்கும் இடத்திற்கு வந்து, கதவை திறந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் ஆலைக் கட்டிடம் தரைமட்டம் ஆனது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…