பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் பலி

Default Image

திண்டுக்கல் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தாடிக்கொம்பை அடுத்த சுக்காம்பட்டியில் அர்ஜுன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஆலையில் பணிபுரியும்  ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பொன்னுதாய் நேற்று வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது தனது செல்போனை ஆலையில் மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பொன்னுதாய் செல்போனை எடுக்க பட்டாசு தயாரிக்கும் இடத்திற்கு வந்து, கதவை திறந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் ஆலைக் கட்டிடம் தரைமட்டம் ஆனது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்