திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக பரமக்குடியில் பெண் ஒருவர் நாக்கை அறுத்து நேர்த்திகடன் செலுத்தினார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது.இதில்,திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதனால்,வருகின்ற மே மாதம் 7ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில்,ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பொதுவகுடியில் வசிக்கும் வனிதா என்ற பெண்,தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டுள்ளார்.
அதனால்,பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் இன்று காலை வனிதா தனது நாக்கினை அறுத்துக் கொண்டு,கொரோனா காரணமாக கோவில் திறக்காததால் அக்கோவில் வாசலிலே நாக்கை வைத்து நேர்த்திகடனை செலுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வனிதாவை மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…