சில மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான நிலை தொடருகிறது. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது. – விசிகி பெண் நிர்வாகி மேடையில் குமுறல்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பெண் நிர்வாகியான மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் பேசினார்.
அவர் பேசுகையில், திருமாவளவன் பெயரை சொன்னாலே ஆண்கள் அணிதிரண்டு விடுகிறார்கள். ஆனால், பெண்கள் அணியை திரட்டுவது கடினமாக இருக்கிறது. அதற்கு மாவட்ட நிர்வாகிகளே தடையாய் இருக்கின்றனர்.
உங்களுக்கு என்ன என கேவலமாக எங்களை திட்டுகிறார்கள். அதையெல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளேன். சென்னையில் அது போல இல்லை. ஆனால், மற்ற சில மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான இந்த நிலை தொடருகிறது. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கட்சிக்குள் சனாதானம் இருக்கிறது.
மேற்கண்டவாறு விசிக பெண் நிர்வாகி திருமாவளவன் இருக்கும்போதே மேடையில் பேசினார். பெண் நிர்வாகி பேசிக்கொண்டிருக்கும் போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது. இதனால், மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
அவர் பேசுகையில், சனாதனத்தை மெல்லவும் வேண்டாம். முழங்கவும் வேண்டாம். சனாதனமே வேண்டாம் என்று துப்பிவிடுங்கள் என பேசினார்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…