கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்..!
நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என அப்பெண் புகார் அளித்துள்ளார்.
மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் வீட்டிற்குள் புகுந்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பறிமுதல் செய்தனர்.