திருநங்கை மகனுடன் சேர்ந்து மனைவி செய்யும் செயல்!அலறிய கணவன்!
- தனது திருநங்கை மகன் உட்பட இருமகன்களுடன் மனைவி செய்த செயல்.அலறிய கணவன்.
- விசாரணையில் குற்றவாளிகளை கணடறிந்த காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் ஆவார்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.அதில் முதல் மனைவி தனது மகளுடன் வெளியூரில் தனியாக வசித்து வருகிறார்.
மேலும் இரண்டாவது மனைவி வனிதாவுக்கு இரண்டு மகன்கள் அதில் நந்தகுமார் என்பவர் திருநங்கை என கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் சின்ராஜ் உடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் வனிதா தனது இரண்டு மகன்களுடன் அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக சின்ராஜ் மட்டும் கிராமத்திலேயே இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மனைவி தனது இரண்டு மகன்களுடன் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ராஜ் அவர்களிடம் கேட்டுள்ளார்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எப்போதெல்லாம் தாயும் மகன்களும் வெளியூருக்கு சென்று வருகிறார்களோ அப்போதெல்லாம் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.ஒருநாள் வழக்கம் போல வெளியூருக்கு சென்றவர்கள் மது அருந்திவிட்டு வந்துள்ளனர்.
அப்போது சின்ராஜ் அவர்களை கண்டித்ததன் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் சின்ராஜை அடித்துள்ளனர்.இதில் சின்ராஜ் அலறி துடித்துள்ளார். பின்னர் மின்சார கம்பியை கொண்டு சின்ராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டது போல காட்ட தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொலை அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறி திசைதிருப்ப பார்த்துள்ளனர்.
பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு சின்ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை யாரோ கம்பியால் கழுத்தை நிறுத்து கொலை செய்வதாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் சின்ராஜின் இரண்டாவது மனைவியுடனும் அவரது மகன்களிடமும் நடத்திய விசாரணையில் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.