100 ரூபாய் கடனை கொடுக்க மறுத்ததால் கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூரை அருகே உள்ள வடபாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர்கள் திருஷ்டி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் இருவரும் திருஷ்டிக்கு கட்ட பயன்படும் கருடன் கிழங்கை பறிக்க சென்றனர்.அப்போது அதே பகுதியே சார்ந்த மற்றோரு திருஷ்டி பொருட்களை விற்பனை செய்யும் தனசேகரனும் அங்கு கருடன் கிழங்கை பறிக்க வந்து உள்ளார்.
அப்போது இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் முருகேசன் கடந்த சில நாள்களுக்கு முன் தனசேகரனிடம் இருந்து ரூ.100 வாங்கி உள்ளார்.அந்த பணத்தை தனசேகரன் திருப்பி கேட்டு உள்ளார். அதற்கு முருகேசன் தரமறுத்து உள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஆத்திரம் அடைந்த தனசேகரன் கீழே கிடந்த கற்களை எடுத்து முருகேசனை கடுமையாக தாக்கியுள்ளார்.மனைவி சித்ரா எவ்வளவு தடுத்தும் தாக்குவதை நிறுத்தவில்லை இதில் காயமடைந்த முருகேசனை செஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முருகேசன் பலத்த காயம் அடைந்தால் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் முருகேசன் செஞ்சி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தனசேகரனிடம் விசாரணை செய்ததில் ரூ.100 கொடுக்காததால் முருகேசனை அடித்து கொன்றதாக தெரியவந்து உள்ளது.