Child [file image]
Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது.
அந்த குழந்தை தகர சீட்டில் கீழே விழும் நிலைக்கு சென்றபோது அக்கம் பக்கத்தினர் பார்த்து ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். குழந்தை மெல்ல மெல்ல அந்த தகர சீட்டில் இருந்து கீழே விழ முயன்றது. இதனை பார்த்த பலரும் கீழே பெரிய போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு நீளமாக விரித்து குழந்தை கீழே விழுந்தால் அப்படியே பாதுகாப்பாக பிடித்துக்கொள்ளலாம் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அதைப்போல மேலும் சிலர் குழந்தையை மேலே ஏறி தூக்கிவிடலாம் என்று கம்பியை பிடித்து மேலே எற முயற்சி செய்தனர். அப்போது சரியாக ஒருவர் ஜன்னலில் இருந்து மேலே ஏறி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தார். குழந்தையும் சரியாக தவழ்ந்து கீழே வந்தது அந்த நபரும் சரியான நேரத்தில் மேலே ஏறி சரியான நேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக தூக்கினார். இதனால் குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த மக்கள் பலரும் இந்த குழந்தையின் தாய் -தந்தைக்கு இவ்வளவு அலட்சியமா? என்றும் தங்களுடைய கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…