பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் போலிஸிடம் குற்றவாளி ஒருவர் கோரிக்கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் தனது துணியை போலீசார் கிழுத்துவிட்டதால் புது துணியும் கேட்கிறார்.
வீடியோவில் பேசிய அவர் ” என்னுடைய டிரஸை கிழுத்துவிட்டிர்கள். எனக்கு புது துணி வாங்கிக்கொண்டு வாருங்கள். உங்களுடைய டிசர்ட் எனக்கு பத்தாது தான் எனக்கு அதனால் புது துணி வேண்டும். எப்படியும் இன்றைக்கு இரவு முழுவதும் என்னை அடிக்க போறீங்க எனவே எனக்கு ஒரு பிரியாணி மற்றும் குவார்ட்டர் வாங்கி கொடுங்கள். இதனை வாங்கிக்கொடுத்துவிட்டு என்னுடைய மேல கை வைங்க.
இதெல்லாம் கொடுக்காமல் அடிவாங்க உடம்பில் தெம்பு இல்லை..அப்படியும் அடித்தீர்கள் என்றால் கொலை கேஸ் ஆகிவிடும். இதெல்லாம் வாங்கிக்கொடுத்து அடித்தால் நாளை அம்மா என்ன அடிச்சிட்டாங்க என்று சொல்வேன். எல்லாத்திற்கும் துணிந்தவன் தான் நான்” எனவும் அவர் பேசியுள்ளார். அவர் என்ன காரணத்துக்காக காவல்துறையிடம் சிக்கியுள்ளார் அவருடைய பெயர் என்ன என்பது பற்றிய தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பேசிய அந்த வீடியோ தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. வீடியோவை செய்தி நிறுவனமான ABP Nadu தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“குவார்ட்டர், பிரியாணி வேணும்! குடுத்துட்டு அடிங்க” POLICE-யிடம் அடம்பிடித்த குற்றவாளிhttps://t.co/wupaoCz9iu | #tnpolice #cuddalore #viralvideo #tamilnews #ABPNadu pic.twitter.com/lPMA6VrnWy
— ABP Nadu (@abpnadu) April 17, 2025