தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!
நான்உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்காவிட்டால் யாதும் கட்சியில் இருக்கமுடியாது ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது, இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பாமக இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் அண்மையில் பதவி விலகினார். இதனையடுத்து, நிறுவனர் ராமதாஸ் புது இளைஞரணித் தலைவர் பொறுப்பு தனது மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். இதனால் கோபமடைந்த அன்புமணி அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? வேறு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இந்த பதவியை கொடுக்கலாமே” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராமதாஸ் ” கட்சியை நிறுவியது நான் தான். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் சொல்வதை தான் கேட்கவேண்டும். ஏனென்றால், இது நான் உருவாக்கிய கட்சி. இப்போது மீண்டும் சொல்கிறேன். இளைஞரணித் தலைவர் பொறுப்பு முகுந்தனுக்கு தான்” என கூறினார்.
ராமதாஸ் இப்படி கூறியவுடன் கோபத்தில் அன்புமணி கையில் வைத்திருந்த மைக்கை கோபத்துடன் சரி..சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு கீழே வைத்தார். அதன்பிறகு எழுந்து பனையூரில் தனக்கு தனி அலுவலகம் இருக்கிறது. இனிமேல் தொண்டர்கள் அனைவரும் அங்கு வந்து என்னை பாருங்கள்” என அறிவித்துவிட்டு கோபத்துடன் சென்றார்.திடீரென கட்சியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள காரணத்தால் யார் பக்கம் செல்லலாம் என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.