ஆட்டுக்கொட்டகையின் மீது விழுந்த மரம்..! 10 ஆடுகள் பலி..!
விழுப்புரத்தில் ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் விழுந்ததால், 10 ஆடுகள் உயிரிழப்பு.
நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் அதிக காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே ஆலந்தூரில் பச்சையப்பன் என்பருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் ஒன்று விழுந்துள்ளது. இதனால் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.