“தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷம்”…த.வெ.க தலைவர் விஜய் குறித்து தந்தை பேச்சு!

விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தட்டும். அவருக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கவேண்டும் என அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

sa chandrasekar tvk vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நல்லபடியாக நடக்கவேண்டும் என வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயின் தாயார் ஷோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

த.வெ.க. மாநாடு

த.வெ.க வின் மாநாடு வரும் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு தொடர்பாக நடக்கும் பணிகளைக் கட்சித் தலைவர் விஜய் சிசிடிவி வாயிலாகக் கவனித்து வருகிறார்.

கோவிலுக்கு விசிட் அடித்த தாய், தந்தை

இந்நிலையில், விஜயின் சொந்த ஊரான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபனா சென்று வழிபாடு செய்தனர். வழிபாடு செய்து முடித்த பிறகு கோவிலுக்கு வருகை தந்தவர்களுக்கு வயிறு நிரம்ப அன்னதானமும் வழங்கினார்கள்.

தந்தை பேச்சு

அன்னதானம் வழங்கிவிட்டு வீட்டிற்குச் செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர் சில விஷயங்களைப் பேசிவிட்டும் சென்றார். அவர் பேசியதாவது “விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தட்டும். அவருக்கு இன்னும் நல்ல பெயர் கிடைக்கவேண்டும் இன்னும் பெரிய நிலைமைக்கு அவர் வளரவேண்டும். மாநாடு நன்றாக நடைபெறவேண்டும் தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

தன்னுடைய மகன் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை வெளியில் வெளிப்படையாகச் சொல்லாமல் தமிழ்நாட்டுக்கு ஒரு பொக்கிஷமாக தன்னுடைய மகன் இருக்கவேண்டும் என்பதைச் சூசகமாகச் சொல்லிவிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire