தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு..!
தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை, 1,303-ஆக உயர்த்தப்படும் என்றும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ரூ.1,046 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.