9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதன்படி,கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்,நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.மேலும்,இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், செப்டம்பர் 25-ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,122 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8,671 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.அதேபோல,கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும்,கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும் மனுதாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…