தமிழகம் முழுவதும் நேற்று 395 சிலைகள் ஆய்வு ..!ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்
தமிழகம் முழுவதும் நேற்று 395 சிலைகளும், திருவாரூரில் மட்டும் 80 சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆய்வுசெய்த பின் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறுகையில், தமிழகம் முழுவதும் நேற்று 395 சிலைகளும், திருவாரூரில் மட்டும் 80 சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,இன்றும் ஆய்வு தொடரும் .இதுவரை கடத்தப்பட்ட 1500க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ .150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.திருவாரூர் தியாகராஜர் கோவில் கல்தூண்களை கடத்தியதாக ரன்வீர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் கற்சிலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.