மாணவரின் வளர்ச்சியில் பெற்றோரைக் காட்டிலும் ஆசிரியருக்கே பொறுப்பு அதிகம் – மநீம
எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என மநீம ட்வீட்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாணவரின் வளர்ச்சியில் பெற்றோரைக் காட்டிலும் ஆசிரியருக்கே பொறுப்பு அதிகம். புத்தகக் கல்வியுடன், ஒழுக்கம், நற்பண்புகளைக் கற்பித்து, மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதுடன், சிறந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
ஊழலற்ற, நேர்மையான சமுதாயத்தை உருவாக்குபவர்களாக மாணவர்களை மெருகேற்றி, தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. இளைய தலைமுறை நற்பாதையிலிருந்து விலகிச் சென்றுவிடாமல் பயணிக்க, அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுடன், சிறந்த முன்னுதாரணமாகத் திகழவும் வாழ்த்துகிறோம்.’ என வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஊழலற்ற, நேர்மையான சமுதாயத்தை உருவாக்குபவர்களாக மாணவர்களை மெருகேற்றி, தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. இளைய தலைமுறை நற்பாதையிலிருந்து விலகிச் சென்றுவிடாமல் பயணிக்க, அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுடன், சிறந்த முன்னுதாரணமாகத் திகழவும் வாழ்த்துகிறோம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) September 5, 2022