எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், அதனை எச்சரிக்க படகை நோக்கி இந்திய காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக தமிழக மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது .
மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பித்ததாக தெரிகிறது.
அந்த சமயம் ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தனையும் மீறி அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் கடலோர காவல்படையினர் சார்பில் இதுகுறித்த விரிவான விளக்கம் வெளியாக வில்லை. மீதம் உள்ள 9 மீனவர்களிடமும் அதிகாரிகள் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் குண்டடிபட்ட மீனவர் வீரவேலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காட்டது. பின்னர் அங்கு குண்டு அகற்றும் வசதி இல்லாத காரணத்தால் தற்போது மீனவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முழங்கால், வயிற்று பகுதியில் மீனவர் வீரவேலுக்கு குண்டு பாய்ந்துள்ளளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…