#TNBudget2020 :கீழடியில் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் புதிய அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது , கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.