கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி. இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். இதனால் வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் படித்து வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவன் வீட்டில் தனியாக இருந்த மெர்லினை துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி அதன் பின்னர் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மெர்லின் கூச்சலிட அந்த மாணவன் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஓடிவிட்டான்.
அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் ரத்த காயத்துடன் கிடந்த மெர்லினை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மெர்லின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவான மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டியூஷன் ஆசிரியை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…