புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு மட்டுமே பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்தன. இதனால் மாணவர்கள் பதக்கத்தை வாங்க வேண்டாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. அந்த வகையில் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் அந்த மாணவியை வெளியே அழைத்து தனியாக அமர வைத்தனர்.
மேலும், பட்டமளிப்பு விழா நடக்கும் அரங்கத்தில் தனியாக அமர வைத்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ரஃபியாவை அதிகாரிகள் அழைத்து விசாரணை செய்தனர். பின்னர், அவர் சி.ஏ.ஏ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்று நினைத்தே காவல்துறை அதிகாரிகள் மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் தெரிகிறது. அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவியை உள்ளே அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து மாணவி ரஃபியாவிற்கு தங்க பதக்கம் வழங்கப்படும் பொழுது. அதனை ஏற்க மறுத்த மாணவி, எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னை வெளியேற்றியாதல் தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன் எனவும், பின்னர் நான் ஹிஜாப் அணிந்து வந்த காரணமா என தெரியவில்லை என்று கூறினார். மேலும், CAA மற்றும் NRC எதிராக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை மறுத்துள்ளதாகவும் மாணவி ரஃபிஹா குறிப்பிட்டுருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…