இரு கைகளையும் இழந்த மாணவி.. கனவை நனவாக்க தமிழக அரசு முன் வரவேண்டும் – சசிகலா
இரு கைகளையும் இழந்த மாணவியின் கனவை நினைவாக்க தமிழக அரசு உதவ முன்வரவேண்டும் என சசிகலா வலியுறுத்தல்.
பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த மாணவியின் படிப்பதற்கு சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் அளிக்க வேண்டும் என சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த, மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவி லட்சுமிக்கு கும்பகோணம் அரசினர் கவின் கலைக் கல்லூரியில் படிப்பதற்கு சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் அளித்திட வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவிக்கு இரு கைகள் இல்லாமல் போனாலும், தனது கால்களால் சிறப்பாக ஓவியங்கள் வரையும் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். அப்பெண்ணின் கனவை நனவாக்க தமிழக அரசு உதவ முன் வரவேண்டும். மாணவி லட்சுமி பெற்றோரால் புறக்கணிப்பட்ட நிலையிலும், தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று, இன்று கல்லூரியில் சேர்ந்து தனது உயர்நிலைப் படிப்பை தொடர வேண்டும் என்ற அப்பெண்ணின் நியாயமான ஆசையை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த, மயிலாடுதுறையைச் சேர்ந்த, மாணவி லட்சுமிக்கு கும்பகோணம் அரசினர் கவின் கலைக் கல்லூரியில் படிப்பதற்கு சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் அளித்திட வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். (1/3)
— V K Sasikala (@AmmavinVazhi) September 14, 2022