விழுப்பரத்தில் மோனிஷா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்த்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த மே மாதம் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.தமிழகத்தில் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நேற்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
வெளியான தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 48.57 தேர்ச்சி பெற்றனர்.ஆனால் நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவியும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவியும் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த சோக சம்பவம் அடங்குவதற்குள் இன்று ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.
விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.இவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.மோனிஷா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவால் 3 பெண்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…