உயிரை பறிக்கும் நீட் ! மேலும் ஒரு மாணவி தற்கொலை !தமிழகத்தில் தொடரும் சோகம்

Default Image

விழுப்பரத்தில் மோனிஷா  என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்த்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.தமிழகத்தில்  1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நேற்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

வெளியான தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 48.57 தேர்ச்சி பெற்றனர்.ஆனால் நேற்று  திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவியும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவியும்  நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த சோக சம்பவம் அடங்குவதற்குள் இன்று ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.
விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.இவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.மோனிஷா  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவால் 3 பெண்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்