வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை, இது அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மத்திய வளைகுடாவில் நின்று கொண்டே இருக்கும். பின்னர் வறண்ட காற்றினால் பாதிக்கப்பட்டு காலியான ஓட்டுடன் மீண்டும் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.விரிவான அப்டேட் விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025