ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு – ஈபிஎஸ்
ஆசிரியர்களின் நலன் காக்கும் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயக முறையில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்களை தமிழக ராசு முடக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வரும் ஆசிரியர் பணி என்பது அறம் சார் பணி, அச்சிறப்பான பணியில் பெரும் பங்காற்றுபவர்களான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயக முறையில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்களை இந்த அரசு முடக்கக்கூடாது.
ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு எனும் இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி , அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதியளிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.