தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், வாக்காளர்கள் தங்களது பெயர் (அல்லது) முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
அந்த வகையில், சென்னையில் மட்டும் 902 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது பிழைகளை திருத்தம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025