10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மொத்த தேர்ச்சி விகிதம்- 95.2% ஆகும். மாணவிகள் தேர்ச்சி- 97%, மாணவர்கள் தேர்ச்சி- 93.3% ஆகும்.ஆனால் மாணவர்களை விட மாணவிகள் 3.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல் மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை திருப்பூர் முதலிடம் (98.53%) ஆகும்.மேலும் இராமநாதபுரம் 2-வது இடம்(98.48%), நாமக்கல் 3-வது இடம்(98.45%) பெற்றுள்ளது.
அதேபோல் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100 ஆகும்.மேலும் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய சிறைக் கைதிகள் 152 பேரில், 110 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் . தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.