இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா -பாகிஸ்தான் போட்டி சென்னை பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரையில் நேரலை செய்யப்பட உள்ளது.

INDIA vs PAKISTAN Live Screening

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் தான்.

இந்நிலையில், துபாயில் தொடங்க இருக்கும் போட்டி முழுவதும் நேரலை செய்யப்படுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசண்ட் நகர் கடற்கரையின் போலீஸ் பூத் அருகிலும் லைவ் டெலிகாஸ்ட் முடிவு செய்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் நேற்றைய தினம், இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்களை குவித்தது.

பின்னர் 352 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இங்க்லிஸ் 120 ரன்கள் விளாசினார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், கடந்த பிப்.19ம் தேதி தொடங்கியது. தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 20ம் தேதி இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியது. அதில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய போட்டியில்  பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்