சென்னையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அக்டோபர் 14 ஆம் தேதி சிறப்பு முகாம்…!சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அக்டோபர் 14 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய அக்டோபர் 14 ஆம் தேதி சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.அதேபோல் http://www.elections.tn.gov.in , http://nvsp.in இணையதளங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.