பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு அவர்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னதாக தவெக தலைவர் விஜய், இதற்கு கருத்து தெரிவித்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தந்து எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டு வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ” பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்”, என கனிமொழி பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்