கல்லூரி மாணவியை கடித்த பாம்பு..! மருத்துவமனைக்கு கட்டைப்பையில் கொண்டுவரப்பட்ட பாம்பு..!
திண்டுக்கல்லில் மாணவியை பாம்பு கடித்த நிலையில், மாணவி மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மீனா என்ற மாணவி முதலாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் இன்று காலை கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது அவரது காலில் பாம்பு வந்து கடித்துள்ளது.
இதனை பார்த்த பேராசிரியர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அந்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிகிச்சைக்காக மாணவியை அழைத்து வந்த போது அவரை கடித்த பாம்பையும் கையோடு பையில் வைத்து எடுத்து வந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.