100000 பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் ! மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசிக அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த வழக்கினை பதிவு செய்துள்ளனர்.இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்.நீதித்துறையை பயன்படுத்தி கருத்துரிமையை பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும்.இது தொடர்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.