பசுவின் உயிரை காப்பாற்றிய இளைஞர் தூத்துக்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Default Image

மனிதர்களைவிட விலங்குகள் பன்மடங்கு உயர்ந்தவை.அவைகள் நமக்கு நற்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றன.மனிதர்கள் விரும்பி வளர்க்கும் உயிரினங்களான நாய்,பூனை,மாடு போன்றைவைகள் நம்மிடம் அளவுக்கு அதிகமான் அன்பினை தரக்கூடியவையாகும்.இதையும் தாண்டி மனிதர்கள் உதவி இன்றி பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றது.

நம்மால் முடிந்த வரை அவைகளை பாதுகாக்க முடியவில்லை என்றாலும் அவைகளுக்கும் அவை  வாழும் இடத்திற்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பது நம் கடமை .இன்று செல்போன் கதிர்விச்சின் மூலம் ரஜினி நடித்த 2.0 வருவது போல சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன குப்பைகளில் போடும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆடு ,மாடு போன்றவை அதிக பாதிப்பு அடைகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பசுவின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சமூக ஆர்வலர் துரை பாண்டியன் என்பவர் இதை தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்தார் அதை பற்றி நாம் அவரிடம் கேட்ட பொழுது , அன்று ஞாயிறு காலை சதிஷ் குமார் என்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

அவர் பேசுகையில் ,அண்ணா நான் நடைப்பயிற்சி மேற்கொள்ள பூங்கா வந்தேன் ஒரு மாடு ஓன்று பாவமாக படுத்திருக்கிறது,கன்னுகுட்டி பக்கத்திலே அழுதுக்கொண்டே இருக்கிறது.15 நிமிடத்திற்கு மேலாக சுற்றிக்கொண்டே வாறேன்,யார் மாடு என்று  தெரியவில்லை அதன் உடல்நிலை மோசமாக உள்ளது . கால்நடை துறையில் யாராவது இருந்தால் அனுப்புங்கள் என்று கூறினான்.உடனே நான் எனக்கு தெரிந்த கால்நடைத்துறை எண்களை அனுப்பி வைத்து ,அந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் சதிஷ் குமாரிடம் இருந்து அழைப்பு வருகிறது.சதிஷ் பேசுகையில் மூன்று மணி நேர போராட்டம் அண்ணா, நிறைய மருத்துவர்களை அனுகினேன் அனைவரும் ஆலோசனை மட்டுமே கூறினார்கள். யாரும் முதலுதவி செய்ய முன்வரவில்லை,காரணம் மாட்டின் உரிமையாளர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர் .

இறுதியாக அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்றேன். ஒரு மணி நேரம் கழித்து ஒரு உதவியாளர் அக்கா வந்தாங்க. நிலைமையை சொன்னேன், அவர்கள் புரிந்துகொண்ட சரி தம்பி வருகிறேன் என்றார்கள்.அங்கு வந்து நான்கு ஊசிகள் போட்டு,வாயில் ஏதோ கரைத்து ஊற்றினார்கள்.உடனே மாடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டது,இன்னும் ஒரு மணி நேரம் கவனிக்காம விட்டிருந்தால்  அது உயிருக்கே ஆபத்தாயிருக்கும்.அவர் செய்த முதலுதவிக்கு பின்னால் மாடு  நலமாக உள்ளது என்றார் சதிஷ்.

 

இந்த நிலைக்கு காரணம் நாம்தான்,மாடுகள் புல் மேய்கின்ற இடமெல்லாம் நெகிழி கழிவுகள் போடுகிறோம் அதனாலதான் இந்த மாதிரி பாதிப்புகள் வருகிறது.நாம் சாப்பிடும் சாப்பாட்டில் மாடு வந்து சாணம் போட்டால் நம்மால் அந்த சாப்பாட்டை உண்ணமுடியுமா ?  என்று கேள்வி எழுப்பியுள்ளார் சமூக ஆர்வலர் துரைபாண்டியன்.

இந்த காலத்தில் நாம் போகிற பாதையில்  என்ன நடந்தாலும் நேரமில்லை ,நமக்கென்ன என்று அலட்சிய போக்கில்லாமல் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பசுவின் உயிரை காப்பாற்றிய சதீஷை தினச்சுவடு சார்பாக வாழ்த்துகிறோம்.

மேலும் வெயில் காலங்களில் பறவைகள் விலங்குகள்  அனைத்தும் தாகத்திற்காக தண்ணீரை  தேடி அலையும்,உங்களால் முடிந்த அளவு பறவைகளுக்கு தண்ணீர் வைத்து அதன் தாகத்தை தீர்த்து பாருங்கள் அதுவும் ஒரு உதவி தான் …   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்